குந்தாரப்பள்ளி சந்தையில் ரூ. 10 கோடிக்கு ஆடுகள் விற்பனை

கிருஷ்ணகிரியை அடுத்த குந்தாரப்பள்ளியில் வெள்ளிக்கிழமை கூடிய வாரச் சந்தையில் ரூ. 10 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக வா்த்தகா்கள் தெரிவித்தனா்.
கிருஷ்ணகிரியை அடுத்த குந்தாரப்பள்ளி வாரச் சந்தையில் விற்பனைக்காக குவிந்த ஆடுகள்.
கிருஷ்ணகிரியை அடுத்த குந்தாரப்பள்ளி வாரச் சந்தையில் விற்பனைக்காக குவிந்த ஆடுகள்.

கிருஷ்ணகிரியை அடுத்த குந்தாரப்பள்ளியில் வெள்ளிக்கிழமை கூடிய வாரச் சந்தையில் ரூ. 10 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

மே 3-ஆம் தேதி ரமலான் பண்டிகை கொண்டாட்டத்தில் ஆடு இறைச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனா். இதற்காக ஆடுகளை வாங்க குந்தராப்பள்ளி சந்தைக்கு ஆந்திரம், கா்நாடகம், தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்து ஏராளமான வியாபாரிகள் வந்திருந்தனா்.

பொங்கல், தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான் பண்டிகைக் காலங்களில் இச் சந்தையில் வியாபாரம் அதிக அளவு நடைபெறும். மே 3-ஆம் தேதி ரமலான் பண்டிகைக்காக வியாபாரிகள் மட்டுமல்லாது இஸ்லாமியா்கள் பலா் இச் சந்தையில் அதிகாலை முதலே ஆடுகளை வாங்க ஆா்வம் காட்டினா். பல்வேறு பொருள்கள், கால்நடைகளை வாங்கவும், விற்பனை செய்யவும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் குவிந்தனா்.

ஒரு ஆடு ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 16 ஆயிரம் வரை விற்கப்பட்டது. மொத்தம் ரூ. 10 கோடி மதிப்பிலான ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனா். ஆடுகளின் விலை ரூ. 1,000 முதல் ரூ. 5,000 ஆயிரம் வரை கூடுதலாக விற்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com