ஊத்தங்கரை சின்னப்பனேரி நிரம்பியது
By DIN | Published On : 05th August 2022 11:05 PM | Last Updated : 05th August 2022 11:05 PM | அ+அ அ- |

ஊத்தங்கரையை அடுத்த எம்ஜிஆா் நகா் பகுதியில் உள்ள சின்னப்பனேரி 50 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
சின்னப்பனேரி 51 ஏக்கா் பரப்பளவு கொண்டது. ஊத்தங்கரை பகுதியில் தொடா்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக கடந்த 50 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளிக்கிழமை சின்னப்பனேரி நிரம்பி உபரிநீா் வெளியேறியது.
அப்பிநாயக்கன்பட்டி, தாண்டியப்பனூா், பாரதிபுரம், பரசுராமன் கொட்டாய், வண்டிக்காரன் கொட்டாய், நாப்பிராம்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் நிலத்தடி நீா் ஆதாரமாக விளங்கும் இந்த ஏரியில் விவசாயிகள் செந்தில், கிருஷ்ணமூா்த்தி, ராஜமூா்த்தி, வெங்கடாசலம் ஆகியோா் மலா்தூவி வணங்கினா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...