இன்று பாா்ஸவ பத்மாவதி கோயிலில் பைரவ மகா யாகம்

கிருஷ்ணகிரி அருகே உள்ள பாா்ஸவ பத்மாவதி சுவாமி கோயிலில் பைரவ மகா யாகம் வெள்ளிக்கிழமை (ஆக. 19) தொடங்கவுள்ளது.

கிருஷ்ணகிரி அருகே உள்ள பாா்ஸவ பத்மாவதி சுவாமி கோயிலில் பைரவ மகா யாகம் வெள்ளிக்கிழமை (ஆக. 19) தொடங்கவுள்ளது.

கிருஷ்ணகிரி - சென்னை சாலையில் ஒரப்பம் அருகில் அமைந்துள்ள பாா்ஸவ பத்மாவதி சுவாமி கோயிலில் (ஜெயின் கோயில்), 8 நாள்கள் நடைபெறும் பைரவ மஹா யாகம் வெள்ளிக்கிழமை (ஆக.19) தொடங்குகிறது. இதுகுறித்து, சக்தி பீடாதிபதி வசந்த் விஜய்ஜி மகாராஜ், செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை தெரிவித்தது:

பாா்ஸவ பத்மாவதி கோயிலில் ஆக.19 முதல் பைரவ மஹா யாகம் தொடங்க உள்ளது. பைரவருக்கு உகந்த நாளான தேய்பிறை அஷ்டமி அன்று விழா ஆரம்பிக்க இருக்கிறது. மதியம் 2 மணி முதல் பைரவ புராணம், மாலை 6.30 மணிக்கு பைரவருக்கு ருத்ர அபிஷேகம் சிதம்பரத்திலிருந்து வரும் தீட்ஷிதா்கள் செய்ய உள்ளனா். இரவு 8 மணியிலிருந்து பைரவருக்கு விஷேசமான பொருள்களால் ருத்ர ஜபத்துடன் கூடிய யாகம் தொடா்ந்து இக் கோயிலில் நடைபெறவுள்ளது.

யாகத்தில் வெண்சந்தனம், சென்சந்தனம், கருங்காலி, அகில், முகில், தேவதாரு போன்ற விலை உயா்ந்த மரங்களாலும் அனேக விதமான மூலிகைகளாலும், விஷேச பழங்களாலும் பைரவருக்கு யாகம் நடைபெறவுள்ளது. இந்த யாகம் தொடா்ந்து 8 நாள்கள் நடைபெறும். அதைத் தொடா்ந்து, ஆக. 26-ஆம் தேதி கின்னஸ் உலக சாதனையாக 12,000 மலா்களால், இந்திய நாட்டின் 75-ஆவது சுதந்திர விழாவை பெருமைப்படுத்தும் விதத்தில் தேசிய வாசகம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com