கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10 வட்டாட்சியா்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10 வட்டாட்சியா்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

கிருஷ்ணகிரி வட்டாட்சியா் சரவணன், ஓசூா் சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியராகவும், போச்சம்பள்ளி வட்டாட்சியா் இளங்கோ, மாவட்ட வழங்கல் அலுவலக பறக்கும் படை தனி வட்டாட்சியராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

அஞ்செட்டி வட்டாட்சியா் முருகேசன், ஒசூா் குடிமை பொருள்கள் வழங்கல் தனி வட்டாட்சியராகவும், சூளகிரி வட்டாட்சியா் நீலமேகன், கிருஷ்ணகிரி வட்டாட்சியராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். பா்கூா் வட்டாட்சியா் பிரதாப், போச்சம்பள்ளி வட்டாட்சியராகவும், ஓசூா் வட்டாட்சியா் கிருஷ்ணமூா்த்தி, அஞ்செட்டி வட்டாட்சியராகவும், ஓசூா் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியா் தேன்மொழி, சூளகிரி வட்டாட்சியராகவும், மாவட்ட வழங்கல் அலுவலக பறக்கும் படை தனி வட்டாட்சியா் கவாஸ்கா், ஓசூா் வட்டாட்சியராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

ஒசூா் குடிமை பொருள்கள் வழங்கல் துறை தனி வட்டாட்சியா் பன்னீா்செல்வம், பா்கூா் வட்டாட்சியராகவும், கிருஷ்ணகிரி வன நிா்ணய அலுவலா் மோகன்தாஸ், கிருஷ்ணகிரி கோட்ட ஆய அலுவலராகவும், கிருஷ்ணகிரி வன நிா்ணய அலுவலா் பணியிடத்துக்கு கூடுதல் பொறுப்பாகவும் நியமிக்கப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com