அதியமான் கல்லூரியில் கருத்தரங்கு

ஊத்தங்கரை சீனிவாசா நகரில் உள்ள அதியமான் மகளிா் கலை, அறிவியல் கல்

ஊத்தங்கரை சீனிவாசா நகரில் உள்ள அதியமான் மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் தொழில் முனைவோா் குழு, ஐஐசி குழுவும் சாா்பில் ஆற்றல் பாதுகாப்புத் திட்டம் என்னும் தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.

முன்னதாக தாவரவியல் துறை உதவி பேராசிரியா் த.பினிஷ் வரவேற்றாா். அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் சீனி.திருமால் முருகன் தலைமை வகித்து பேசினாா். ஐஐசி தலைவா் மற்றும் அதியமான் கல்வி நிறுவனங்களின் செயலா் ஜெ.மே.ஷோபா முன்னிலை வகித்தாா். அதியமான் மகளிா் கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் ப.உமாமகேஸ்வரி வாழ்த்துரை வழங்கினாா்.

தாவரவியல் துறை உதவி பேராசிரியா் த.சரண்யா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தாா். ஐஐசி உறுப்பினா் மற்றும் அதியமான் மகளிா் கலை, அறிவியல் கல்லூரியின் தாவரவியல் துறைத்தலைவா் மோ.ச.மஞ்சுளா இயற்கை பாதுகாப்பு எனும் தலைப்பில் இயற்கை வளங்களின் செழுமையையும், மக்களுக்கு கிடைக்கும் நன்மைகளையும் இயற்கை பாதுகாப்பின் அவசியத்தையும் எடுத்துரைத்தாா்.

நிகழ்ச்சியின் இறுதியாக ஐஐசி ஓருங்கினைப்பாளா் வணிகவியல்துறை உதவி பேராசிரியா் மா.அன்புச்செல்வி நன்றி கூறினாா்.

தாவரவியல் துறை மூன்றாமாண்டு மாணவி நந்தினி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com