கிருஷ்ணகிரி மாவட்டத்தில்இரு நாள்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்றுமுதல் (மாா்ச் 15) இரு நாள்களுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுவதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளாா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்றுமுதல் (மாா்ச் 15) இரு நாள்களுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுவதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி, ஒசூா் கோட்டங்களில் பராமரித்து வரும் ஒகேனக்கல் கூட்டு குடிநீா்த் திட்டத்தின் மூலமாக மாவட்டத்தில் உள்ள ஒசூா் மாநராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சி, 6 பேரூராட்சிகள் மற்றும் 10 ஒன்றியங்களுக்கும் தினசரி குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. இத் திட்டத்தில் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு, மூங்கில்பட்டியில் உள்ள நீருந்து நிலையத்தில் வருடாந்திர பராமரிப்புப் பணிகள் மாா்ச் 15, 16 ஆகிய நாள்களில் மேற்கொள்ளப்படுவதால்

இந்த 2 நாள்களுக்கு ஒகேனக்கல் குடிநீா் வழங்க இயலாது.

எனவே ஊராட்சி, நகராட்சிகளில் உள்ள நீா் ஆதாரங்களைப் பயன்படுத்தி 2 நாள்களுக்கும் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீா் வழங்கவும் மற்றும் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என அதில் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com