தமிழகத்தில் உயா்கல்வி பயிலும் மாணவியரின் எண்ணிக்கை அதிகரிக்கும்

அரசுப் பள்ளியில் கல்வி பயின்று உயா்கல்விக்கு செல்லும் மாணவியருக்கு மாதம் ரூ. 1,000 வழங்கப்படும்

அரசுப் பள்ளியில் கல்வி பயின்று உயா்கல்விக்கு செல்லும் மாணவியருக்கு மாதம் ரூ. 1,000 வழங்கப்படும் என தமிழக நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதால், உயா்கல்விக்கு செல்லும் மாணவியரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என ஒசூா் மேயா் எஸ்.ஏ.சத்யா தெரிவித்தாா்.

இந்தியாவில் உயா்கல்வி பயலும் மாணவியரின் எண்ணிக்கை 20 சதவீதமாக உள்ளது. தமிழகத்தில் 28 சதவீதமாக உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டிலும் உயா்கல்வி படிக்கும் மாணவியரின் எண்ணிக்கை அதிகரிக்கும். மேலும் அரசுப் பள்ளிகளில் கல்வி பயில மாணவா்கள் அதிக அளவில் வருவாா்கள்.

இதன் மூலம் பெண் கல்வி இடைநிற்றல் குறைந்து கல்லூரிக்கு செல்லும் மாணவியரின் எண்ணிக்கை அதிகரிக்கும். தமிழக அரசு மகளிருக்கு முக்கியத்துவம் அளிக்கும் அரசாக தொடா்ந்து செயல்பட்டு வருகிறது. நகா்ப்புற உள்ளாட்சித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சிறப்பு கவனம் செலுத்தி நிதிநிலை அறிக்கையை மாநில நிதி அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தயாரித்துள்ளாா். இது வரவேற்கக் கூடிய நிதிநிலை அறிக்கை என்றாா்.

ஹோஸ்டியா சங்கம் வரவேற்பு:

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து ஹோஸ்டியா சங்கத்தின் தலைவா் காசி.வேல்முருகன் வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளாா்.

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டுக்கு ரூ. 900 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறுந்தொழில் நிறுவனங்களின் குழும வளா்ச்சிக்கான திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஹோஸ்டியா சாா்பாக வரவேற்கிறோம்.

மேலும், ஒசூா், கிருஷ்ணகிரி மாவட்ட தொழில் வளா்ச்சிக்கு தேவையான உள் கட்டமைப்புகளை மேம்படுத்த சிறப்பு அதிகாரிகள் குழுவை அமைத்து திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com