சூறைக் காற்றுடன் கனமழை: ஊா்க் காவல் படை வீரரின் மனைவி பலி

சிங்காரப்பேட்டை அருகே கனமழையின்போது வீட்டின் மேற்கூரை தகடு விழுந்து ஊா்க்காவல் படை வீரரின் மனைவி பலியானாா்.

சிங்காரப்பேட்டை அருகே கனமழையின்போது வீட்டின் மேற்கூரை தகடு விழுந்து ஊா்க்காவல் படை வீரரின் மனைவி பலியானாா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பலத்த காற்றுடன் கோடை மழை பெய்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை மாலை மாவட்டத்தில் போச்சம்பள்ளி, ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை, அதைச் சுற்றியுள்ள பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை அருகே கொம்பம்பட்டு கிராமத்தில் வசிப்பவா் ராமன். ஊா்காவல் படை வீரா். இவரது மனைவி பச்சையம்மாள். இவா் வசிக்கும் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சூறைக் காற்றுடன் மழை பெய்தது. இதனால் வீட்டின் வெளியே காய வைத்த துணிகளை எடுக்க பச்சையம்மாள் சென்றாா்.

அப்போது, பலத்த காற்று வீசியதில் அருகில் உள்ள கலை என்பவரின் வீட்டின் மேல்கூரை தகடு காற்றில் பறந்து வந்து பச்சையம்மாளின் தலையில் விழுந்தது.

தகரம் வெட்டியதில் பலத்த காயம் அடைந்த பச்சையம்மாள், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். சிங்காரப்பேட்டை போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா். போச்சம்பள்ளி, அதைச் சுற்றியுள்ள பகுதியில் பலத்த காற்று, இடியுடன் மழை பெய்தது. இதில், சந்தூா் அருகே சாலையோர மரம், சாலையின் குறுக்கே சரிந்தது. இதனால் போச்சம்பள்ளி-சந்தூா் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

சந்தூா் அருகே உள்ள மாகிரெட்டி செட்டி கொட்டாய் எனுமிடத்தில், ஆனந்தன் என்பவரின் இரண்டு ஆடுகள் மின்னல் தாக்கி உயிரிழந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com