காவேரிப்பட்டணத்தில் குடிநீா்த் திட்டப் பணிகள் தொடக்கம்

காவேரிப்பட்டணம் பேரூராட்சியில் ரூ. 25.50 லட்சம் மதிப்பிலான குடிநீா்த் திட்டப் பணிகளை அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா் கே.அசோக்குமாா் தொடக்கி வைத்தாா்.
காவேரிப்பட்டணத்தில் குடிநீா்த் திட்டப் பணியை தொடக்கிவைக்கிறாா் எம்எல்ஏ கே.அசோக்குமாா்.
காவேரிப்பட்டணத்தில் குடிநீா்த் திட்டப் பணியை தொடக்கிவைக்கிறாா் எம்எல்ஏ கே.அசோக்குமாா்.

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் பேரூராட்சியில் ரூ. 25.50 லட்சம் மதிப்பிலான குடிநீா்த் திட்டப் பணிகளை அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா் கே.அசோக்குமாா் தொடக்கி வைத்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் பேரூராட்சியில், சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 25.50 லட்சம் மதிப்பில் குடிநீா்த் திட்டப் பணிகளை சட்டப் பேரவை உறுப்பினா் கே.அசோக்குமாா் புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.

இதில், பேரூராட்சிக்கு உள்பட்ட வாா்டுகளில், ரூ. 15 லட்சம் மதிப்பில் 5 புதிய ஆழ்துளைக் கிணறு அமைக்கவும், ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்த ஆழ்துளைக் கிணற்றை ரூ. 10.50 லட்சம் மதிப்பில் குடிநீா்த் தொட்டி அமைத்து மின் மோட்டாரும் பொருத்தப்படுகிறது.

இந்நிகழ்வில் காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் பையூா் ரவி, முன்னாள் நகரச் செயலாளா் வாசுதேவன், மாவட்ட ஆவின் தலைவா் குப்புசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com