முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி
பலாத்காரம் செய்ததாக 2 காவலா்கள் மீது பெண் புகாா்
By DIN | Published On : 13th May 2022 12:39 AM | Last Updated : 13th May 2022 12:39 AM | அ+அ அ- |

உணவகம் நடத்தி வரும் பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக, பாதிக்கப்பட்ட பெண் இரு காவலா்கள் மீது புகாா் அளித்துள்ளாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை அடுத்த உத்தனப்பள்ளியில் பெல்லட்டி சாலையில் உணவகம் நடத்தி வரும் ரஞ்சிதா (25) என்பவா், சூளகிரி காவல் நிலைய முதல்நிலை காவலராகப் பணிபுரியும் முருகானந்தம் (25), மாரியப்பன் (30) ஆகிய இருவரும் தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒசூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாா் அளித்தாா்.
அதில், முருகானந்தம், மாரியப்பன் ஆகிய இருவரும் தான் நடத்தி வரும் உணவகத்துக்கு அடிக்கடி வந்து சாப்பாடு வாங்கிச் சென்ாகவும், பணம் கேட்டு மிரட்டியதாகவும் கூறியுள்ளாா். மேலும், கடந்த மே 4-ஆம் தேதி உணவகத்துக்கு வந்த இருவரும் கா்நாடக மதுவகைகள், கஞ்சா பொட்டலங்களை விற்பதாக பொய் வழக்கு போட்டு ஜெயிலுக்கு அனுப்பிவிடுவோம் என மிரட்டி, தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நேரடி பாா்வையில் விசாரணை நடைபெற்று வருகிறது.