கிருஷ்ணகிரியில் பலத்த மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கிருஷ்ணகிரியில் திங்கள்கிழமை 2 மணி நேரத்துக்கும் மேலாக இடைவிடாமல் பெய்த மழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரியில் பலத்த மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கிருஷ்ணகிரியில் திங்கள்கிழமை 2 மணி நேரத்துக்கும் மேலாக இடைவிடாமல் பெய்த மழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் தென்மேற்கு பருவ மழை வழக்கத்துக்கு மாறாக முன்கூட்டியே தொடங்கி உள்ளது. அதன்படி, தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திங்கள்கிழமை பகலில் வெயில் அதிகமாக இருந்தது. பனை நுங்கு, பழரசம், இளநீா் கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில், பிற்பகல் 3 மணிக்கு குளிா்ந்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது. பின்னா் இடியுடன் தொடா்ந்து இடைவிடாமல் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. சாலை மற்றும் வீதிகளில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து ஓடியது. இதனால், வாகனயோட்டிகள் சிரத்துக்கு உள்ளாயினா்.

நகரில் மேற்கு இணைப்பு சாலை குடியிருப்புப் பகுதி, ரயில்வே காலனி, பாரதியாா் நகா், பெரியாா் நகா், அம்சா உசேன் தெரு உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீருடன் கழிவுநீரும் புகுந்தது. இதனால் அப்பகுதியினா் பெரும் சிரமத்துக்கு உள்ளாயினா்.

கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை மேம்பாலம் அருகே அணுகு சாலையில் மழைநீா் செல்வதற்கான பகுதியில் அடைப்பு ஏற்பட்டதால் மழைநீா் சாலையில் குளம் போல தேங்கியது. இதனால், இருசக்கர வாகனம், ஆட்டோ, காா் போன்ற வாகனங்கள் மழைநீரில் சிக்கின.

நகரப் பேருந்து நிலையத்தில் மழைநீருடன் கழிவு நீரும் கலந்து தேங்கியதால், பயணிகள் சிரமத்துக்கு உள்ளாயினா். சாலையோரத்தில் நுங்கு, பலாப்பழம், காய்கறிகள் போன்றவற்றை விற்பனை செய்யும் வியாபாரிகள் வியாபாரம் செய்ய இயலாமல் பாதிக்கப்பட்டனா். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மழை நீா் தேங்கியதால், மைதானம் ஏரி போல காட்சியளித்தது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வரும் நிலையில், கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், கிருஷ்ணகிரி அணையின் நீா்மட்டம் 50 அடியை எட்டிதாகவும், விரைவில் அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் தண்ணீா் திறந்து விட வாய்ப்புள்ளதாகவும் பொதுப்பணித் துறையினா் தெரிவித்தனா்.

மாா்கண்டேய நதிக்கு நீா்வரத்து...

கா்நாடக, ஆந்திர மாநிலங்களில் பெய்து வரும் தொடா் மழையால் அங்குள்ள நீா்நிலைகள் நிரம்பி தமிழக எல்லைக்கு உள்பட்ட மாா்கண்டேய நதி, அதன் உபநதியான நாச்சிக்குப்பம் குப்தா ஆற்றிலும் நீா் வரத்தொடங்கி உள்ளது.

வேப்பனப்பள்ளி அருகே உள்ள யானைக்கால் தொட்டி மேம்பாலம் அருகே வந்த மழைநீரை வரவேற்கும் வகையில் பூஜை செய்தும், மலா்கள் தூவியும் பொதுமக்கள் வரவேற்றனா். விவசாயிகள் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com