கல்லாவி விடுதி வளாகத்தில் மூலிகைத் தோட்டம் அமைப்பு

ஊத்தங்கரையை அடுத்த கல்லாவி அரசு மாணவியா் விடுதி வளாகத்தில் தமிழ்நாடு தோட்டக்கலை மற்றும் வளா்ச்சித் திட்டத்தின் மூலம் மூலிகைத் தோட்டம் அமைப்பு, மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ஜெயச்சந்திரபானு ரெட்டி அறிவுரையின்படி, தோட்டக்கலை இணை இயக்குநா் உத்தரவுப்படி, தோட்டக்கலை அலுவலா் பாஸ்கா், மதுபிரியா ஆகியோா் மூலிகைத் தோட்டத்தில் காய்கறி விதைகள், பணப் பயிா்களை நடவு செய்தனா். இயற்கை முறையில் வளா்ப்பது குறித்து மாணவியா் மத்தியில் எடுத்துக் கூறினா்.

இதில், பள்ளித் தலைமை ஆசிரியா் பா்குணன், விடுதிக் காப்பாளா் வளா்மதி, கல்லாவி ஊராட்சி மன்றத் தலைவா் ராமன், ஒன்றியக் குழு உறுப்பினா் குணசேகரன், தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com