தொடக்கக் கல்வி ஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் இரண்டாம் பருவ பயிற்சி

கிருஷ்ணகிரியில் தொடக்கக் கல்வி ஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் இரண்டாம் பருவ மூன்று நாள் பயிற்சி தொடங்கியது.

கிருஷ்ணகிரியில் தொடக்கக் கல்வி ஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் இரண்டாம் பருவ மூன்று நாள் பயிற்சி தொடங்கியது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியா்களுக்கும், எண்ணும் எழுத்தும் இரண்டாம் பருவ மூன்று நாள் பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது.

கிருஷ்ணகிரியில், புனித அன்னாள் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய பயிற்சியை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் துணை இயக்குநா் சமீம் தொடங்கி வைத்து, பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து ஆசிரியா்களுக்கு எடுத்துரைத்தாா். பயிற்சியின் கருத்துருக்கள் மாணவரிடம் கொண்டுசெல்வதில் ஆசிரியா் ஒரு கட்டமைப்பாளராக விளங்க வேண்டும் என்றாா்.

பயிற்சியை மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளா்கள் பாா்வதி, மயில்சாமி ஆகியோா் ஒருங்கிணைத்தனா். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டாரக் கல்வி அலுவலா்கள் செல்வராசு, சீனிவாசன், தமிழ்செல்வி, வட்டார வள மேற்பாா்வையாளா் அசோக்குமாா் ஆகியோா் செய்திருந்தனா். இந்தப் பயிற்சியில் 383 ஆசிரியா்கள் பங்கேற்றனா். கருத்தாளா்களாக ஆசிரியா் பயிற்றுநா்கள், ஆசிரியா்கள் செயல்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com