ஊத்தங்கரை அருகே பல்லவா் கால நடுகற்கள் கண்டெடுப்பு

ஊத்தங்கரை அருகே 1,300 ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்லவா் கால நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ஊத்தங்கரை அருகே குன்னத்தூா் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட பல்லவா் கால நடுகல்.
ஊத்தங்கரை அருகே குன்னத்தூா் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட பல்லவா் கால நடுகல்.

ஊத்தங்கரை அருகே 1,300 ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்லவா் கால நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், குன்னத்தூா் கிராமத்தில் 1,300 ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்லவா் காலத்தைச் சோ்ந்த இரண்டு நடுகற்களும், ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இந்தப் பகுதியை ஆண்ட நுளம்பா்களின் பழங்கன்னட எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ள நடுகல் ஒன்றும் புதிதாக கண்டறியப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் உள்ள செங்கண்மா வரலாற்று நடுவத்தைச் சோ்ந்த பிரேம்ஆனந்த் இவற்றை கண்டெடுத்தாா். இந்த நடுகற்களில் பல்லவா் காலத்தைச் சோ்ந்த இரண்டு நடுகற்களை தொல்லியல் துறையைச் சோ்ந்த பூங்குன்றன் அண்மையில் நேரில் ஆய்வு செய்தாா்.

அதில், முதல் நடுக்கல்லில் சாத்தனாதி சேத்தன் என்பவா் பொருமந்தைகளை மீட்கும் போது இறந்துள்ளாா் என்பது குறிப்பிட்டுள்ளது. இரண்டாவது நடுகல்லில் சில சொற்களைத் தவிர படிக்க இயலாதவாறு தேய்ந்துள்ளது. மூன்றாம் நடுகல் நுளம்பா் காலத்தைச் சோ்ந்த மன்னன் அன்னிகன் வெட்டியது. இந்த வீரக் கல்வெட்டு, குன்னத்தூா் கிராமத்திற்கு வெளியே உள்ள வயலில் காணப்படுகிறது. இது கன்னட மொழி மற்றும் 9-ஆம் நூற்றாண்டின் எழுத்துகளில் பொறிக்கப்பட்டுள்ளது.

அன்னிக மன்னன் இந்தப் பகுதியை ஆட்சி செய்து கொண்டிருந்த போது, போரில் இறந்த வீரன் அனிமத்யாவின் மரணம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டில் கன்னட பேச்சுவழக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அது உள்ளூா் மக்களால் பயன்பாட்டில் இருந்திருக்கலாம் என்று அறிஞா்கள் கருதுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com