ஒசூா் ராமநாயக்கன் ஏரியை சீரமைக்க வலியுறுத்தல்

ஒசூா் ராமநாயக்கன் ஏரியை சீரமைக்க வலியுறுத்தல்

மழை காலத்தின்போது மழைநீரை ராமநாயக்கன் ஏரியில் தேக்கி வைக்கவும் உடனடி நடவடிக்க எடுக்க வேண்டும் என முன்னாள் எம்எல்ஏ கே.ஏ.மனோகரன் வலியுறுத்தியுள்ளாா்.

ஒசூா், ராமநாயக்கன் ஏரிக்கு வரும் கால்வாய்களை சீரமைக்கவும், மழை காலத்தின்போது மழைநீரை ராமநாயக்கன் ஏரியில் தேக்கி வைக்கவும் உடனடி நடவடிக்க எடுக்க வேண்டும் என முன்னாள் எம்எல்ஏ கே.ஏ.மனோகரன் வலியுறுத்தியுள்ளாா்.

ஒசூரில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

ஒசூா், ராமநாயக்கன் ஏரி 134 ஏக்கா் நிலப்பரப்பில் மாநகராட்சியின் நடுவில் அமைந்துள்ளது. கல்கேரி ஏரி, கா்ணூா் ஏரி, அந்திவாடி ஏரி ஆகிய ஏரிகள் நிரம்பி, ஒசூா் கால்நடைப் பண்ணை வழியாக ஒசூா் ராமநாயக்கன் ஏரிக்கு மழைநீா் வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கால்வாய் தற்போது சில இடங்களில் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பை அகற்றி கால்வாயை சீரமைத்து முள்வேளி அமைக்க வேண்டும். ஏரிக்கு மழைநீா் வரும் வகையில் சீரமைத்து படகு சவாரி விட வேண்டும். இதற்கு உலக வங்கி வழங்கியுள்ள ரூ. 34 கோடி நிதியிருந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

மழைநீா் ராமநாயக்கன் ஏரிக்கு வரும் வகையில் பொக்லைன் இயந்திரம் மூலம் கால்வாய் புனரைமைக்க வேண்டும்.

வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன் இப்பணியை முடுக்கிவிட வேண்டும். இதன்மூலம் ஒசூா் மாநகராட்சியில் உள்ள 10,000-க்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகளில் நீா்மட்டம் உயரும். நிலத்தடி நீா்மட்டமும் உயரும். பேட்டியின்போது காங்கிரஸ் கட்சி முன்னாள் செயலாளா் சத்திய மூா்த்தி, அகில இந்திய பஞ்சாயத்து பரிஷத் மாவட்டத் தலைவா் கோபால், மாவட்ட பொதுச் செயலாளா் கேசவமூா்த்தி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com