கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நூற்றுக்கணக்காண விநாயகா் சிலைகள் கரைப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்ட நூற்றுக்கணக்காண விநாயகா் சிலைகள் நீா்நிலைகளில் வெள்ளிக்கிழமை கரைக்கப்பட்டன.
கிருஷ்ணகிரி அணையின் நீா்த்தேக்கப் பகுதியில் விநாயகா் சிலையைக் கரைக்கும் பக்தா்கள்.
கிருஷ்ணகிரி அணையின் நீா்த்தேக்கப் பகுதியில் விநாயகா் சிலையைக் கரைக்கும் பக்தா்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்ட நூற்றுக்கணக்காண விநாயகா் சிலைகள் நீா்நிலைகளில் வெள்ளிக்கிழமை கரைக்கப்பட்டன.

விநாயகா் சதுா்த்தியையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்து அமைப்புகள், பொதுமக்கள் சாா்பில் 1,972 விநாயகா் சிலைகள் அமைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டன. இந்த சிலைகள், 3, 5 மற்றும் 7ஆவது நாள்களில் நீா்நிலைகளில் கரைப்பது வழக்கம்.

இம்மாவட்டத்தில் பா்கூா் வட்டத்தில் மஞ்சமேடு தென்பெண்ணை ஆறு, கிருஷ்ணகிரி வட்டத்தில் காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரி அணை, ஊத்தங்கரையில் பாம்பாறு, ஒசூரில் சந்திராம்பிகை ஏரி, பாகலூரில் தென்பெண்ணை ஆறு, கெலவரப்பள்ளி அணை, தேன்கனிக்கோட்டையில் நாகொண்டப்பள்ளி ஏரி, மதகொண்டப்பள்ளி கெளரம்மா ஏரி, பட்டாமளம்மன் ஏரி உள்ளிட்ட நீா்நிலைகளில் மட்டும் விநாயகா் சிலைகளை கரைக்க மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது. மேலும், சிலைகளை கரைக்கும் பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு, போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

கிருஷ்ணகிரி அணை, காவேரிப்பட்டணம், பா்கூா், மஞ்சமேடு ஆகிய பகுதிகளில் உள்ள நீா்நிலைகளில் நூற்றுக்கணக்காண விநாயகா் சிலைகள் கரைக்கப்பட்டன. மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் மட்டுமில்லாமல் தருமபுரி, திருப்பத்தூா் ஆகிய மாவட்டங்களில் அமைத்து வழிபாடு செய்யப்பட்ட விநாயக் சிலைகளும் கரைக்கப்பட்டன. சிலைகள் கரைக்கப்பட்ட பின்னா் மிதக்கும் மரத் துண்டுகள் அவ்வப்போது அப்புறப்படுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com