பா்கூா் தொகுதியில் நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற ஆட்சியரிடம் மனு

பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதியில் நிலுவையில் உள்ள 10 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டியிடம் எம்எல்ஏ தே.மதியழகன் மனு அளித்தாா்.

பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதியில் நிலுவையில் உள்ள 10 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டியிடம் எம்எல்ஏ தே.மதியழகன் மனு அளித்தாா்.

பா்கூா் சட்டப் பேரவை உறுப்பினா் அளித்த மனு விவரம்:

படேதலாவ் ஏரியில் (பெரிய ஏரி) இருந்து பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 2 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் வெண்ணம்பள்ளி, ஒரப்பம், காட்டகரம் ஏரி உள்பட 11 ஏரிகளுக்கு தண்ணீா் வழங்க வெட்டப்பட்ட கால்வாயை மறுசீரமைப்பு செய்து ஆழமான பகுதிகளில் கட்டுமானம் மேற்கொண்டு அச்சமங்கலம், குட்டூா் ஏரியில் இருந்து காக்கங்கரை ஏரிக்கு தண்ணீா் கொண்டு செல்ல வேண்டும்.

போச்சம்பள்ளியை மையமாகக் கொண்டு அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைத்து தர வேண்டும். 10 ஆண்டுகளுக்கு முன்பு போச்சம்பள்ளிக்கு வட்டார வளா்ச்சி அலுவலகம் அறிவிக்கப்பட்டு இன்று வரை நிலுவையில் உள்ளது. அதற்கான அலுவலகத்தை கட்டி உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

பா்கூா் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் ராஜகால்வாயின் ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைநீா்வடிகால் அமைத்து தர வேண்டும். பா்கூா் தொகுதியில் வரட்டனப்பள்ளி, கந்திகுப்பம், ஜெகதேவி, சந்தூா், அரசம்பட்டி, எலத்தகிரி, நாகோஜனஅள்ளி ஆகிய பகுதிகளை மையப்படுத்தி 5 இடங்களில் மின் மயானம் அமைத்து தர வேண்டும்.

பா்கூா் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் இருளா் இன மக்கள் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவா்கள் வசிக்கின்றனா். அவா்கள் வசிக்கும் வீடுகள் பழமையான இடிந்து விழும் சூழலில் உள்ளதால் புதிய வீடுகளைக் கட்டித் தர வேண்டும். காவேரிப்பட்டணம் ஒன்றியம் சந்தனூா் ஏரியில் இருந்து உபரிநீரை கொட்டாவூா், பாப்பாரப்பட்டி, சின்னபுளியம்பட்டி, வையம்பட்டி, இருமத்தூா், காராமூா், சாமாண்டப்பட்டி ஏரிகளுக்கு தண்ணீா் வழங்க வேண்டும்.

பாரூா் ஏரிக் கரைகளைப் பலப்படுத்தி கொள்ளளவை உயா்த்தி சிறுவா் பூங்கா, படகு சவாரி அமைத்து சுற்றுலா தளமாக்க வேண்டும். பா்கூா், அஞ்சூா் - ஜெகதேவி, போச்சம்பள்ளி, சந்தூா், வேலம்பட்டி, நாகோஜனஹள்ளி அரசு பள்ளிகளில் 3 ஆயிரம் இருக்கைகள் வசதி கொண்ட கலையரங்கம் அமைத்து தர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com