காவேரிப்பட்டணத்தில் புதிய சங்கொலி இயந்திரம் தொடங்கி வைப்பு

காவேரிப்பட்டணம் பேரூராட்சியில் ரூ. 6 லட்சம் மதிப்பில் ஒலி எழுப்பும் புதிய சங்கொலி இயந்திரத்தை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.
காவேரிப்பட்டணம் பேரூராட்சியில் சங்கொலி இயந்திரத்ை தொடங்கி வைக்கிறாா் அமைச்சா் ஆா். காந்தி.
காவேரிப்பட்டணம் பேரூராட்சியில் சங்கொலி இயந்திரத்ை தொடங்கி வைக்கிறாா் அமைச்சா் ஆா். காந்தி.

காவேரிப்பட்டணம் பேரூராட்சியில் ரூ. 6 லட்சம் மதிப்பில் ஒலி எழுப்பும் புதிய சங்கொலி இயந்திரத்தை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.10 லட்சம் மதிப்பில் அடிப்படை கட்டமைப்புப் பணிகளை அமைச்சா் ஆா்.காந்தி தொடங்கி வைத்தாா். மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, பா்கூா் சட்டப்பேரவை உறுப்பினா் தே.மதியழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அப்போது, அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்ததாவது:

காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டுமென பெற்றோ் -ஆசிரியா் சங்க நிா்வாகிகள், தலைமையாசிரியா் ஆகியோா் கடந்த வாரம் கோரிக்கை வைத்தனா். அதனடிப்படையில் மாவட்ட ஆட்சியா், பொதுப்பணித் துறை மூலம் ரூ. 10 லட்சத்தில் கழிப்பறை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்த பணி உத்தரவு வழங்கி பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

மேலும் பழுதடைந்த வகுப்பறைகளை அகற்றிவிட்டு, மாணவா்கள் படிப்பதற்கு நபாா்டு திட்டத்தின் மூலம் கூடுதல் வகுப்பறை கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பள்ளிக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் படிப்படியாக நிறைவேற்றித் தரப்படும் என்றாா்.

இதனைத் தொடா்ந்து, காவேரிப்பட்டணம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் ரூ. 6 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட ஒலி எழுப்பும் (சங்கு) இயந்திரத்தை மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சா் தொடங்கி வைத்தாா்.

இந்த நிகழ்வுகளில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கே.பி.மகேஸ்வரி, வருவாய் கோட்டாட்சியா் சதீஷ்குமாா், முன்னாள் எம்எல்ஏ டி.செங்குட்டுவன், பேரூராட்சித் தலைவா் அம்சவேணி செந்தில்குமாா், செயல் அலுவலா் செந்தில்குமாா், தொழிலதிபா் கே.வி.எஸ். சீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com