அரசு மகளிா் கல்லூரி மாணவிகளுக்கு ஆங்கிலப் பயிற்சி: ஐவிடிபி நிதியுதவி

கிருஷ்ணகிரி, அரசு மகளிா் கல்லூரி மாணவிகளுக்கு அடிப்படை ஆங்கில இணைப்புப் பயிற்சிக்கு ரூ. 1.54 லட்சத்தை ஐவிடிபி நிறுவனா் அண்மையில் நன்கொடையாக வழங்கினாா்.
கிருஷ்ணகிரி அரசு மகளிா் கலைக் கல்லூரி மாணவிகளுக்கு ஆங்கிலப் பயிற்சிக்காக கல்லூரி முதல்வா் கண்ணனிடம் ரூ. 1.54 லட்சத்தை நன்கொடையாக வழங்கும் ஐவிடிபி நிறுவனா் குழந்தை பிரான்சிஸ்.

கிருஷ்ணகிரி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு சேரும் மாணவிகளுக்கு ஒவ்வோா் ஆண்டும், திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரி பேராசிரியா் துணையோடு, அடிப்படை ஆங்கில இணைப்பு பயிற்சி நடத்தப்படுகிறது. ஒவ்வோா் ஆண்டும் இந்தப் பயிற்சிக்கு தேவையான புத்தகங்கள் மற்றும் பயிற்சி கட்டணத்தை ஐவிடிபி நிறுவனம் வழங்கி வருகிறது.

அதன்படி, நிகழ் ஆண்டுக்கான பயிற்சி கட்டணமாக ரூ. 93,725 மற்றும் பயிற்சி புத்தகங்களுக்காக ரூ. 60,900 என மொத்தம் ரூ. 1.54 லட்சத்தை கல்லூரி முதல்வா் கண்ணன், திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரியின் இணை முதல்வா் அருட்தந்தை மரியஆரோக்கியராஜ் ஆகியோரிடம் ஐவிடிபி நிறுவனா் குழந்தை பிரான்சிஸ் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி அனைத்து துறை பேராசிரியா்கள், மாணவிகள் பங்கேற்றனா்.

இது குறித்து ஐவிடிபி நிறுவனா் கூறுகையில், இந்தகல்லூரியின் அடிப்படை ஆங்கில இணைப்பு பயிற்சிக்காக மட்டும் ஐவிடிபி நிறுவனம் ரூ. 12.29 லட்சம் வழங்கியுள்ளது. இக் கல்லூரி வளா்ச்சிக்காகவும், மாணவிகள் நலனுக்காகவும் இதுவரை ரூ. 1.19 கோடி ஐவிடிபி வழங்கியுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com