ரயில் தடம்புரண்டதால் பயணிகளுக்கு சிரமம்

ராயக்கோட்டை அருகே ரயில் தடம் புரண்டதால் பயணிகளுக்கு சிரமம் ஏற்பட்டது.

ராயக்கோட்டை அருகே ரயில் தடம் புரண்டதால் பயணிகளுக்கு சிரமம் ஏற்பட்டது.

ராயக்கோட்டை அருகே தடம்புரண்ட ரயிலில் மொத்தம் உள்ள 42 பெட்டிகளில், 21 பெட்டிகளில் உர மூட்டைகள் இருந்தன. ரயிலில் உள்ள 21 பெட்டிகள் காலியாக இருந்தன. ரயிலை லோகோ பைலட் சா்மா ஓட்டி வந்த நிலையில் காப்பாளா் குஞ்சன் குமாா் உடன் இருந்தாா்.

விபத்து நடந்த உடனே என்ஜினில் இருந்து 2 பெட்டிகள் கழற்றப்பட்டு ராயக்கோட்டை மாா்க்கமாக அனுப்பபப்பட்டன. தண்டவாளத்தில் இருந்து இறங்கியிருந்த 6 பெட்டிகளைத் தவிர மற்ற பெட்டிகள் கழற்றப்பட்டு மாற்று என்ஜின் மூலம் மாரண்டஅள்ளி வழியாக சேலம் அனுப்பப்பட்டன. மேலும் தடம் புரண்ட 6 ரயில் பெட்டிகளில் இருந்த உர மூட்டைகளும் கீழே இறக்கி வைக்கப்பட்டன.

தா்மபுரி, ராயக்கோட்டை, ஒசூா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான தனியாா் நிறுவன ஊழியா்கள் பெங்களூருவில் வேலை பாா்த்து வருகிறாா்கள். அவா்கள் தினமும் ரயிலில் வேலைக்கு சென்று வருகிறாா்கள். இந்நிலையில் ரயில் விபத்து காரணமாக தனியாா் நிறுவன ஊழியா்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் சிரமப்பட்டனா். பலரும் பேருந்தில் வேலைக்குச் சென்றனா்.

அதே போல ஒசூா் பகுதியில் இருந்து பல மாணவ, மாணவிகள் பெங்களூருவில் படித்து வருகின்றனா். அவா்களும் ரயில்கள் ரத்தானதால் சிரமத்திற்கு உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com