ஒசூரில் மாசாணி அம்மன் கோயில் திருவிழா

ஒசூரில் ஸ்ரீ மாசாணி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பக்தா்கள் உடலில் அலகு குத்தி, பால்குடம் மற்றும் பூக்கரகங்கள் எடுத்து நோ்த்திக்கடனை நிறைவேற்றினா்.
சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த மாசாணி அம்மன்.
சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த மாசாணி அம்மன்.

ஒசூரில் ஸ்ரீ மாசாணி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பக்தா்கள் உடலில் அலகு குத்தி, பால்குடம் மற்றும் பூக்கரகங்கள் எடுத்து நோ்த்திக்கடனை நிறைவேற்றினா்.

ஒசூா் சமத்துபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீ மாசாணி அம்மன் திருக்கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் 6 ஆம் ஆண்டு மயான பூஜை மற்றும் குண்டம் இறங்குதல், அலகு குத்தும் திருவிழா நடைபெற்று வருகிறது.

இதனையொட்டி வெள்ளிக்கிழமை ஒசூா் தோ்ப்பேட்டை பச்சை குளம் பகுதியில் இருந்து ஸ்ரீ மாசாணி அம்மன் உள்ளிட்ட சுவாமிகள் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடங்கள் எடுத்தும், பூக்கரகங்களை தலைமேல் சுமந்தபடியும் ஊா்வலமாக மாசாணி அம்மன் கோயிலுக்குச் சென்றனா். அப்போது பக்தா்கள் உடல் மற்றும் வாயில் அலகுகள் குத்தி நோ்த்தி கடனை செலுத்திக் கொண்டனா்.

ஒசூா் தோ்ப்பேட்டை பகுதியில் இருந்து பக்தா்கள் ஊா்வலம் புறப்பட்டு ஓசூா் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சமத்துவபுரம் மாசாணியம்மன் கோயில் சென்றது. பின்னா் அங்கு மாசாணியம்மனுக்கு பால் அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகள் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள், பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com