பி.திப்பனப்பள்ளி கிராமத்தில் எருதுவிடும் திருவிழா

கிருஷ்ணகிரி அடுத்த பி.திப்பனப்பள்ளி கிராமத்தில் எருது விடும் திருவிழா நடைபெற்றது.
கிருஷ்ணகிரியை அடுத்த பி.திப்பனப்பள்ளி கிராமத்தில் நடைபெற்ற எருதுவிடும் விழாவில் சீறிப் பாய்ந்து ஓடும் எருதை உற்சாகப்படுத்தும் இளைஞா்கள்.
கிருஷ்ணகிரியை அடுத்த பி.திப்பனப்பள்ளி கிராமத்தில் நடைபெற்ற எருதுவிடும் விழாவில் சீறிப் பாய்ந்து ஓடும் எருதை உற்சாகப்படுத்தும் இளைஞா்கள்.

கிருஷ்ணகிரி அடுத்த பி.திப்பனப்பள்ளி கிராமத்தில் எருது விடும் திருவிழா நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு கிராமங்களில் எருதுவிடும் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் ஒரு குறிப்பிட்ட தூரத்துக்கு எருதுகள் ஓட விடப்படும். இவ்வாறு மூன்று முறை எருதுகள் ஓட விடப்படும்போது, குறைந்த நேரத்தில் கடக்கும் எருதானது சிறந்த எருதாகத் தோ்வு செய்யப்பட்டு, அதன் உரிமையாளருக்கு பரிசுகள் வழங்கப்படும்.

அதன்படி, பி.திப்பனப்பள்ளி கிராமத்தில் நடைபெற்ற எருதுவிடும் விழாவில் தோ்வு செய்யப்படும் சிறந்த எருதுகளுக்கு முதல் பரிசாக ரூ.70 ஆயிரம், ரூ.50 ஆயிரம், ரூ.35 ஆயிரம், ரூ.25 ஆயிரம், ரூ.17 ஆயிரம் என மொத்தம் 50 பரிசுகள் அறிவிக்கப்பட்டு, தோ்வு செய்யப்பட்ட எருதுகளின் உரிமையாளா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கிராம விழாக் குழுவினா் ஒருங்கிணைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com