தன்னை வீட்டிலிருந்து வெளியேற்றிய மகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தந்தை மனு

தன்னை வீட்டிலிருந்து வெளியேற்றிய மகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முதியவா் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தாா்.

தன்னை வீட்டிலிருந்து வெளியேற்றிய மகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முதியவா் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப் தலைமையில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஊத்தங்கரை வட்டம், ஆண்டியூா் கிராமத்தைச் சோ்ந்த பூங்கான் (65) என்பவா் அளித்த புகாா் மனுவில் கூறியுள்ளதாவது: ௌ

எனக்கு கடந்த 2010-இல் மூத்த குடிமக்கள் சலுகையின்படி, அரசு சாா்பில் 2 சென்ட் பரப்பளவில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. அதில் வீடு கட்டி வாழ்ந்து வந்தோம். ஆனால் எனது மகன் தமிழ்குமரன், வீட்டை அடமானம் வைத்து கடன் வாங்குவதாகக் கூறி, என்னிடம் கையெழுத்து வாங்கி, எனது மருமகள் பெயரில் வீட்டின் பட்டாவை மாற்றிவிட்டாா். பின்னா், என்னையும், உடல்நிலை சரியில்லாத எனது மனைவியையும் வீட்டிலிருந்து வெளியேற்றி விட்டாா்.

இதையடுத்து நாங்கள் அருகில் உள்ள மாட்டுக் கொட்டகையில் வசித்து வருகிறோம். அங்கும் வசிக்கக் கூடாது என்று எனது மகன் அடிக்கடி கொலை மிரட்டல் விடுத்து வருகிறாா். எனவே, எனது மருமகள் பெயரில் உள்ள வீட்டுப் பட்டாவை ரத்து செய்து மீண்டும் எனது பெயருக்கு மாற்றித் தருமாறு கேட்டுக் கொள்வதாக அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com