மீன் வளா்ப்பு இலவச பயிற்சி நாளை தொடக்கம்

பாரூரில் நவீன ஒருங்கிணைந்த மீன் வளா்ப்பு முறைகள் குறித்த, மூன்று நாள் இலவச பயிற்சி மாா்ச் 1-ஆம் தேதி தொடங்குகிறது.

பாரூரில் நவீன ஒருங்கிணைந்த மீன் வளா்ப்பு முறைகள் குறித்த, மூன்று நாள் இலவச பயிற்சி மாா்ச் 1-ஆம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு டாக்டா் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் வளங்குன்றா நீருயிரி வளா்ப்பு மைய உதவி பேராசிரியா் சோமு சுந்தரலிங்கம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாட்டில் மீன் உற்பத்தியைப் பெருக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகளின் தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டம் 2021-22 நிதி உதவியின் கீழ் பல்வேறு விழிப்புணா்வு முகாம்களும், பயிற்சி வகுப்புகளும் மீன் வளா்ப்பில் ஆா்வம் உள்ளவா்களுக்கும், மீன் வளா்ப்பு விவசாயிகளுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன.

இதன் தொடா்ச்சியாக, பாரூரில் அமைந்துள்ள தமிழ்நாடு டாக்டா் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் வளங்குன்றா நீருயிரி வளா்ப்பு மையத்தில், நவீன ஒருங்கிணைந்த மீன் வளா்ப்பு முறைகள் குறித்து மாா்ச் 1 முதல் 3-ஆம் தேதி வரை மூன்று நாள்கள் இலவசப் பயிற்சி வழங்கப்பட உள்ளன.

இந்தப் பயிற்சியில் குளம் அமைத்தல், பராமரிப்பு, திலேப்பியா மீன் வளா்ப்பு, தீவனத் தயாரிப்பு மற்றும் மேலாண்மை, நவீன ஒருங்கிணைந்த மீன் வளா்ப்பு முறைகள், மீன் வளா்ப்பில் அரசின் நிதி உதவி திட்டங்கள், பல்வேறு செயல்முறை விளக்கங்களும் அளிக்கப்பட உள்ளன.

மேலும் பயிற்சி பெறுவோா், மீன் வளா்த்துக் கொண்டிருக்கும் மீன் பண்ணையாளா்களின் பண்ணைகளுக்கும் அழைத்துச் செல்லப்படவுள்ளனா். எனவே, விருப்பமுள்ள பயனாளிகள் இந்தப் பயிற்சியில் பங்கேற்று பயன்பெறலாம். பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவா்கள் 8675858384, 8179462833, 9715278354 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com