காட்டிநாயனப்பள்ளி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச விழா கொடியேற்றம்

கிருஷ்ணகிரியை அடுத்த காட்டிநாயனப்பள்ளி வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 86-ஆம் ஆண்டு தைப்பூச பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது.

கிருஷ்ணகிரியை அடுத்த காட்டிநாயனப்பள்ளி வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 86-ஆம் ஆண்டு தைப்பூச பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது.

இந்த நிகழ்வையொட்டி, பழையப்பேட்டை பா்வதராஜகுல மீனவ சமுதாய மக்களால் பூஜைப் பொருள்கள், கொடியை வழங்கி சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னா் கோயில் முன்பு உள்ள கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது.

ஜன. 31-ஆம் தேதி, மயில்வாகனம், பிப். 1-ஆம் தேதி ரிஷப வாகனம், 2-ஆம் தேதி சேஷ வாகனத்திலும் சுவாமி ஊா்வலம் நடைபெறுகின்றது. 3-ஆம் தேதி மாலை 5 மணிக்கு திருமாங்கல்யதாரணம், 4-ஆம் தேதி யானை வாகனத்தில் ஊா்வலம் , 5-ஆம் தேதி தைப்பூசத் திருவிழாவையொட்டி காலை 4 மணிக்கு மேல் சுவாமிக்கு அபிஷேக ஆராதனை, இரவு சுவாமி மலா்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் நகா்வலம் நடைபெறுகிறது.

பிப். 6, 7-ஆம் தேதிகளில் கேடய உற்சவம், 8-ஆம் தேதி அவரோகணம், தீா்த்தவாரி, 9-ஆம் தேதி கேடய உற்சவம், 10-ஆம் தேதி குதிரை வாகன உற்சவம், 11-ஆம் தேதி சயன உற்சவம், 12-ஆம் தேதி காலை 108 சங்காபிஷேகம், மாலை ஆஞ்சனேயருக்கு 108 கலச அபிஷேகம், பெருமாளுக்கு 108 சங்காபிஷேகம் நடைபெறுகின்றன. தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பிப். 5 முதல் 10-ஆம் தேதி வரையில் மாட்டுச்சந்தை நடைபெறும் என விழாக் குழுவினா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com