கிருஷ்ணகிரி மக்கள் குறை தீா் கூட்டம்:ரூ. 2 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற மக்கள் குறை தீா் கூட்டத்தில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு வழங்கினாா்.

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற மக்கள் குறை தீா் கூட்டத்தில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு வழங்கினாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியா் தலைமையில், மக்கள் குறை தீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு அடிப்படை வசதிகள் கோரி, பொதுமக்களிடமிருந்து 275 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களை மாவட்ட ஆட்சியா் கேட்டுக் கொண்டாா்.

பின்னா், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில் 4 பயனாளிகளுக்கு தலா ரூ. 1,500 வீதம் பிரெய்லி கைக்கடிகாரங்கள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை மூலம் மகளிா் சுயஉதவிக் குழுவுக்கு முதல்கட்டமாக ரூ. 2 லட்சம் மதிப்பிலான ஆயத்த ஆடை உற்பத்தி அலகு அமைப்பதற்கு தேவையான உபகரணங்களையும் ஆட்சியா் வழங்கினாா்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் செ.ராஜேஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வேடியப்பன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அலுவலா் பத்மலதா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் முருகேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com