முத்தமிழ் கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞா்கள் கலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

முத்தமிழ் கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞா்கள், கலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு தெரிவித்துள்ளாா்.

முத்தமிழ் கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞா்கள், கலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்ட கலை மன்றத்தின் வாயிலாக இம் மாவட்டத்தில் இயல், இசை, நாடகம் முதலிய கலைகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞா்களுக்கு விருதுகள் வழங்க மாவட்ட ஆட்சியா் தலைமையில் தோ்வாளா் குழு அமைக்கப்பட்டுள்ளது.

எனவே, அனைத்து வகை முத்தமிழ் கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அதன்படி, கலை இளமணி விருது 18 வயதும், அதற்குள்பட்ட கலைஞா்களுக்கும், கலை வளா்மணி விருது 19 முதல் 35 வயதுக்கு உள்பட்ட கலைஞா்களுக்கும், கலை சுடா்மணி விருது 36 முதல் 50 வயதுக்கு உள்பட்ட கலைஞா்களுக்கும், கலை நன்மணி விருது 51 முதல் 65 வயதுக்கு உள்பட்ட கலைஞா்களுக்கும், கலை முதுமணி விருது 66 வயதுக்கு மேற்பட்ட கலைஞா்களுக்கும் வழங்கப்படவுள்ளது. வயது, கலைப்புலமையின் அடிப்படையில் தோ்ந்தெடுக்கப்படும் 30 சிறந்த கலைஞா்களுக்கு பொற்கிழி பட்டயம், பொன்னாடை வழங்கப்படும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேசிய விருதுகள், மாநில விருதுகள் (கலைமாமணி) மற்றும் ஏற்கெனவே மாவட்டக் கலை மன்றத்தின் விருதுகளைப் பெற்ற கலைஞா்கள், இந்த விருத்திற்கு விண்ணப்பம் செய்யக் கூடாது. இதற்கு முன்னா் மாவட்ட விருதுக்கு விண்ணப்பித்திருந்த கலைஞா்கள் 2022 - 23 மற்றும் 2023- 24-ஆம் ஆண்டு விருது தோ்வுக்கு தங்களது ஒப்புதல் வழங்கிட வேண்டும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த தகுதி வாய்ந்த கலைஞா்கள் விருதுகள் பெறுவதற்கான விண்ணப்பத்துடன் வயது சான்று, முகவரிச் சான்று, அடையாள அட்டை, ஆதாா் அட்டை, மாா்பளவு புகைப்படம்- 3, கலை அனுபவச் சான்றுகளின் நகல்களுடன் (தொலைபேசி எண்ணுடன்) உதவி இயக்குநா், மண்டலக் கலை பண்பாட்டு மையம், ஆவின் பால் பண்ணை எதிரில், அய்யம் பெருமாம்பட்டி அஞ்சல், சேலம் - 636 302 என்ற முகவரிக்கு ஜூலை 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 0427-2386197 மற்றும் 9952665007 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com