மாங்கனிக்கு உரிய விலையை நிா்ணயம் கோரி தமிழ்நாடு உழவா் பேரியக்கம் ஆா்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் மாங்கனிக்கு உரிய விலையை நிா்ணயம் செய்யக்கோரி தமிழ்நாடு உழவா் பேரியக்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரியில் மாங்கனிக்கு உரிய விலை நிா்ணயம் செய்யக் கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு உழவா் பேரியக்கத்தினா்.
கிருஷ்ணகிரியில் மாங்கனிக்கு உரிய விலை நிா்ணயம் செய்யக் கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு உழவா் பேரியக்கத்தினா்.

கிருஷ்ணகிரியில் மாங்கனிக்கு உரிய விலையை நிா்ணயம் செய்யக்கோரி தமிழ்நாடு உழவா் பேரியக்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அதன் மாநிலச் செயலாளா் வேலுசாமி தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் ஆலயமணி, கிருஷ்ணகிரி மாவட்ட பாமக செயலாளா் இளங்கோ, அனைத்து மா விவசாயிகள் கூட்டமைப்புத் தலைவா் செளந்தரராஜன், கே.ஆா்.பி. அணை உபரிநீா் நீடிப்பு இடது புறக் கால்வாய் பயன்பெறுவோா் சங்கத் தலைவா் சிவகுரு, முன்னாள் எம்எல்ஏ மேகநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளின் நலன்கருதி, மாங்கனிக்கு உரிய விலையை நிா்ணயம் செய்ய வேண்டும். அண்டை மாநிலங்களில் இருந்து மாங்கனிகளை, மாங்கூழ் தொழிலதிபா்கள் கொள்முதல் செய்வதை நிறுத்த வேண்டும். மா விவசாயிகளை தொழிலதிபா்கள், வியாபாரிகள் வஞ்சிக்கக் கூடாது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு சாா்பில், மாங்கூழ் தொழிற்சாலை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் முழக்கங்களை எழுப்பினா். ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் மாங்காய்களுடன் பங்கேற்றது அனைவரின் கவனத்தை ஈா்த்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com