சுங்கச்சாவடி அமைக்க எதிா்ப்பு தெரிவித்து கண்டன பொதுக் கூட்டம்
By DIN | Published On : 22nd May 2023 12:00 AM | Last Updated : 22nd May 2023 12:00 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த கதவணிபுதூரில் புதிதாக சுங்கச்சாவடி அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சி சாா்பில் கண்டன பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நான்குமுனை சந்திப்பில் நடைபெற்றது.
சுங்கச்சாவடி அமைய உள்ள இடத்தில் நிலம் கையகப்படுத்தப்பட்டது. கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு அரசு வழங்கும் தொகை குறைவாக உள்ளதாக, நிலத்தின் உரிமையாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். கண்டன பொதுக்கூட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளா் மு.நெப்போலியன் தலைமை வகித்தாா். மாவட்ட அமைப்பாளா் பவுண்ராஜ், மாவட்டப் பொருளாளா் திருப்பதி, மாநில செயற்குழு உறுப்பினா் சரவணன், மாவட்ட தொழிற்சங்கத்தைச் சோ்ந்த சுரேஷ்குமாா், நித்தியகுமாா், விமல்குமாா், ராஜா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.