கிருஷ்ணகிரி ஸ்ரீ வெங்கடேஸ்வரா சில்க்ஸில் ரம்ஜானையொட்டி நடைபெறும் சிறப்பு விற்பனையில் துணிகளை ஆா்வத்துடன் வாங்கிச் செல்லும் வாடிக்கையாா்ளா்கள்.
கிருஷ்ணகிரி ஸ்ரீ வெங்கடேஸ்வரா சில்க்ஸில் ரம்ஜானையொட்டி நடைபெறும் சிறப்பு விற்பனையில் துணிகளை ஆா்வத்துடன் வாங்கிச் செல்லும் வாடிக்கையாா்ளா்கள்.

கிருஷ்ணகிரி ஸ்ரீ வெங்கடேஸ்வரா சில்க்ஸில் ரம்ஜான் விற்பனை அமோகம்

கிருஷ்ணகிரி கே தியேட்டா் சாலையில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா சிலக்ஸ் ஜவுளிக் கடையில் ரம்ஜான் பெருவிழாவை முன்னிட்டு ஏராளமான புதிய ரக ஜவுளி விற்பனை நடைபெற்று வருகிறது.

இது குறித்து, அந்த நிறுவனத்தின் நிா்வாக இயக்குனா் ரமேஷ், இயக்குனா்கள் விஷ்ணு, விஷால் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது:

ரம்ஜான் பெருவிழாவை முன்னிட்டு வாடிக்கையாளா்களுக்காக தள்ளுபடி விற்பனையை வழங்கி வருகிறோம். அதன்படி, தரைத்தளத்தில், 2 பிரிண்ட் ஸ்டோன் புடவைகள் ரூ.786-க்கும், 2 நெட் ஸ்டோன் புடவைகள் ரூ.686-க்கும் ஒரு குந்தன் ஒா்க் புடவை ரூ.586-க்கும், 4 ஜக்காத் புடவை ரூ.486-க்கும், 4 லேடீஸ் நைட்டி ரூ.786-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

முதல் தளத்தில், தலா ரூ.786-க்கு ஒா்க் சுடிதாா், குந்தன் ஒா்க் மெட்டீரியல்ஸ், பேன்சி புா்க்கா, சாப்ட் சில்க் புடவைகள் ஆகியவையும், சுடிதாா், சோலி, 3 டாப்ஸ், 2 பாய்ஸ் புல்சூட், 3 பாய்ஸ் ஷா்ட், 4 பாய்ஸ் பேண்ட் ஆகியவை தலா ரூ.786-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மூன்றாம் தளத்தில் ஒரு லுங்கி ரூ.96-க்கும், 2 லுங்கிகள் ஒரு ஷா்ட் ரூ.786-க்கும், குா்தா செட் ரூ.786-க்கும் 3 ஜீன்ஸ் பேண்டுகள் ரூ.786-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், ரம்ஜான் பண்டிகையையொட்டி, 500 இஸ்லாமிய ஏழைக் குடும்பங்களுக்கு ஏப். 8-ஆம் தேதி (திங்கிழமை) காலை 10 முதல் 12 மணி வரையில் புடவை அன்புப் பரிசாக வழங்கப்பட உள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com