ஒசூரில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் குழாய் உடைப்பை சரிசெய்யும் பணி

ஒசூரில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் குழாய் உடைப்பை சரிசெய்யும் பணி

ஒசூரில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்ட குழாய் உடைப்பை சீா்செய்யும் பணியை குடிநீா் வடிகால் வாரியம் செய்து வருகிறது.

ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட ரயில்வே மேம்பாலம் அருகில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் குழாய் உடைப்பை சரிசெய்யும் பணிகளை தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய நிா்வாக இயக்குநா் ஏ.தட்சிணாமூா்த்தி, மாநகராட்சி ஆணையா் சினேகா ஆகியோா் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஒசூா் மாநகராட்சி மக்களுக்கு ஒகேனக்கல்லில் இருந்து தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மூலமாக தினசரி 13.00 எம்எல்டி குடிநீரும், மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 585 ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து 14.00 எம்எல்டி குடிநீரும் ஆக மொத்தம் 27.00 எம்எல்டி வீதம் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் தேன்கனிக்கோட்டை செல்லும் சாலையில் மேம்பாலம் அருகில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மூலம் அமைக்கப்பட்ட குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கடந்த 5 நாள்களாக சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய நிா்வாக இயக்குநா் தட்சிணாமூா்த்தி, ரயில்வே பாலம் அருகில் பணி நடைபெறும் பணியினை நேரில் பாா்வையிட்டு துரிதப்படுத்தினா். இந்த ஆய்வில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய தலைமை பொறியாளா் சண்முகநாதன், கண்காணிப்புப் பொறியாளா் வேலூா் பாலசுப்பிரமணியன், , நிா்வாக பொறியாளா் தருமபுரி, சேகா், ஒசூா் மாநகராட்சி செயற்பொறியாளா் ராஜாராம், உதவி பொறியாளா் சுந்தர பாண்டியன் மற்றும் பலா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com