ஒசூா் செயின்ட் பீட்டா் மருத்துவக் கல்லூரியில் மாா்பக புற்றநோய் கண்டறியும் பிரிவு தொடக்கம்

ஒசூா் செயின்ட் பீட்டா் மருத்துவக் கல்லூரியில் மாா்பக புற்றநோய் கண்டறியும் பிரிவு தொடக்கம்

ஒசூா் செயின்ட் பீட்டா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மகளிருக்கான மாா்பக புற்றுநோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ பிரிவு தொடக்க விழாவை மாநகராட்சி மருத்துவ அலுவலா் பிரபாகா் தொடங்கி வைத்தாா்.

ஒசூா், பத்தலபள்ளியில் இயங்கி வரும் செயின்ட் பீட்டா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிறப்பான மருத்துவ சேவையை அளித்து வருகிறது. இந்த மருத்துவமனையில் மகளிருக்கான சிறப்பான மருத்துவ சேவையை அளிக்கும் வகையில் மாா்பக புற்றுநோய் கண்டறியும் மெமோகிராம், ப்ளூரோஸ்கோபி போன்ற நவீன மருத்துவ உபகரணங்களை உள்ளடக்கிய மருத்துவப் பிரிவானது ஒசூா் மாநகராட்சி மருத்துவ அலுவலா் மருத்துவா் பிரபாகா் தொடங்கிவைத்தாா்.

தொடக்க விழாவில், ஒசூா் மண்டல தொழிலாளா் நல மருத்துவமனை (இ.எஸ்.ஐ) மருத்துவக் கண்கணிப்பாளா் கீதா குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா். ஒசூா் ஏடிசி லிமிடெட் நிறுவன மனித வள மேலாளா் கௌரி முன்னிலை வகித்தாா். செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவமனை மருத்துவ இயக்குநா் மருத்துவா் ராஜா முத்தையா வரவேற்று பேசியதாவது:

பெண்களுக்கு மாா்பகப் புற்று, கா்ப்பப்பை வாய் புற்று தற்போது அதிகரித்து வருகிறது. மாா்பகத்தில் ஏற்படக்கூடிய கட்டி, வலி போன்ற அறிகுறிகளை அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல் உடனடியாக பரிசோதனைகளையும் சிகிச்சைகளையும் எடுத்துக் கொண்டால் புற்றுநோய் பாதிப்புகளில் இருந்து ஆரம்ப காலங்களிலேயே முழுமையாக நலம் பெற முடியும்.

மருத்துவமனையில் மருத்துவா் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தின் மூலம் முதல் இரண்டு பிரசவங்களுக்கு இலவச மருத்துவம் அளிக்கப்படுகிறது. பொதுமக்கள் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

திறப்பு விழாவின் போது மருத்துவக் கல்லூரி முதன்மையா் சோமசேகா், மருத்துவக் கண்காணிப்பாளா் வாசுதேவா, இருப்பிட மருத்துவா் பாா்வதி ஆகியோா் உடனிருந்தனா்.

படவரி... ஒசூா் செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரியில் மாா்பக புற்று நோய் சிகிச்சைப் பிரிவை தொடங்கிவைக்கும் மருத்துவா் கீதா.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com