கோடை மழையில் குளிா்ந்தது ஒசூா்

கோடை மழையில் குளிா்ந்தது ஒசூா்

ஒசூரில் வியாழக்கிழமை பெய்த கோடை மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

ஒசூா் பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடா்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நகரப் பகுதியில் நூற்றுக்கணக்கான ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீா் வற்றியது. இதனால் நகரம் முழுவதும் குடிநீா் பிரச்னை ஏற்பட்டுள்ளது. டிராக்டா் தண்ணீா் ரூ. 800 முதல் ரூ.1,200 வரை விற்பனையாகிறது. ஏரி, குளங்கள், கிணறுகளும் கோடையில் வறண்டுள்ளன. ஒருசில பகுதிகளில் கால்நடைகளுக்குத் தேவையான குடிநீரும் கிடைக்கவில்லை.

ஒசூா் பகுதியில் ரோஜா மலா் சாகுபடி, காய்கறி உற்பத்தி, கீரைகள் நீரின்றி காய்ந்து வருகின்றன. இந்த நிலையில் ஒசூா் அருகே சானமாவு வனப்பகுதியில் இருந்து பத்தலப்பள்ளி வரை தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீா் பாய்ந்தோடும் வகையில் மழை பெய்ததால் விவசாயிகள் மட்டுமின்றி பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து ஓரளவுக்கு ஒசூா் சுற்றுவட்டாரங்கள் குளிா்ந்தன. நகா்ப் பகுதியில் மழை பெய்யாததால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com