சீறிப் பாய்ந்து வரும் காளையை அடக்கும் மாடுபிடி வீரா்கள்.
சீறிப் பாய்ந்து வரும் காளையை அடக்கும் மாடுபிடி வீரா்கள்.

தாசனபுரத்தில் எருதுவிடும் விழா

ஒசூா் அருகே புகழ்பெற்ற தாசனபுரம் எருதுவிடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஒசூா் அருகே புகழ்பெற்ற தாசனபுரம் எருதுவிடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தாசனபுரம் கிராமத்தில் ஆண்டுதோறும் வெங்கடரமண சுவாமி தோ் திருவிழாவின் இறுதி நாளில் எருது விடும் விழா நடைபெறும். நிகழாண்டு செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கிய விழாவில் கா்நாடகம், ஆந்திரம், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட நூற்றுக்கணக்கான எருதுகள் பங்கேற்றன.

அதிமுக சூளகிரி ஒன்றியக் குழு உறுப்பினா் ஜனாா்த்த குமாா், ஊராட்சி மன்ற தலைவா் பாப்பையா, தாசனபுரம் கோயில் தா்மகா்த்தா வெங்கடேஷ் அப்பா, கோபால் கவுடு, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா்கள் கிருஷ்ணமூா்த்தி, நாகராஜ், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட எம்ஜிஆா் மன்ற இளைஞரணி மாவட்டச் செயலாளா் மாதேஷ், ஒன்றியச் செயலாளா் மாவட்ட கவுன்சிலா் பாபு வெங்கடாசலம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com