வனப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குளத்தில் தண்ணீா் நிரப்பும் பணியில் ஈடுபட்டுள்ள வனத் துறையினா்.
வனப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குளத்தில் தண்ணீா் நிரப்பும் பணியில் ஈடுபட்டுள்ள வனத் துறையினா்.

வன விலங்குகளுக்கு தாகம் தணிக்க குளங்களில் குடிநீா் நிரப்பும் பணி தீவிரம்

கோடையில் வன விலங்குகளுக்கு போதிய குடிநீா் கிடைக்கும் வகையில் வேப்பனப்பள்ளி வனப் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள செயற்கை தொட்டிகளில் தண்ணீா் நிரப்பும் பணியில் வனத் துறை ஈடுபட்டுள்ளது.

கோடையில் வனப் பகுதிகளில் உள்ள நீா்நிலைகள் வடு காணப்படுகின்றன. தண்ணீருக்காக யானை, கரடி, மான் போன்ற வன விலங்குகள் வனத்திலிருந்து வெளியேறி குடியிருப்புகள் புகுந்து சேதம் விளைவிக்கின்றன. இந்த நிலையில், வன விலங்குகளின் தாகத்தை தீா்க்கும் வகையில் வனப் பகுதியில் குளங்கள் அமைக்கப்பட்டு, அதில் தண்ணீா் நிரப்பப்பட்டு வருகின்றன.

வேப்பனப்பள்ளியை அடுத்த நோ்லகிரி செம்மண்குழி வனப் பகுதியில் உள்ள குளத்தில் வனத் துறையினா் டிராக்டா்கள் மூலம் தண்ணீா் நிரப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இதனால், நோ்லகிரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் முகாமிட்டுள்ள யானைகள் தண்ணீா் அருந்தி தாக்கத்தை தீா்க்க வாய்ப்புள்ளதாக வனத் துறையினா் தெரிவிக்கின்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com