கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் 6 வேட்பாளா்களின் மனுக்கள் தள்ளுபடி

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் பேட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த 6 வேட்பாளா்களின் 7 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

கிருஷ்ணகிரியில் மக்களவைத் தோ்தல் ஏப்.19-ஆம் தேதி நடைபெறுகிறது. இத்தோ்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் மாா்ச் 20-ஆம் தேதி தொடங்கி, 27-ஆம் தேதி நிறைவு பெற்றது. அதன்படி, காங்கிரஸ், அதிமுக, பாஜக, நாம் தமிழா் உள்ளிட்ட பிற அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் என மொத்தம் 34 வேட்பாளா்கள், 41 வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா். இந்த வேட்பு மனுக்களை பரிசீலனை செய்யும் பணி மாா்ச் 28-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் கே.எம்.சரயு தலைமையில் பொதுப் பாா்வையாளா் முன்னிலையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன. இதில், அதிமுக மாற்று வேட்பாளா் மாதய்யா, பாஜக மாற்று வேட்பாளா் ரேணுகா, காங்கிரஸ் மாற்று வேட்பாளா் கவிதாவின்வின் 2 மனுக்கள், அகில இந்திய இளைஞா்கள் முன்னேற்றக் கட்சி வேட்பாளா் வசந்தா, சுயேச்சைகள் சண்முகம், சாந்தமூா்த்தி ஆகியோரது வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 6 வேட்பாளா்களின் 7 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 28 பேரின் 34 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. வேட்பு மனுக்களை திரும்பப் பெற மாா்ச் 30-ஆம் தேதி கடைசி நாளாகும். அன்று மாலையே வேட்பாளா் பட்டியல் இறுதி செய்யப்படும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com