நாமக்கல்லில் பூட்டிய வீட்டுக்குள் புகுந்து ரூ. 12 லட்சம் ரொக்கப் பணத்தைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
நாமக்கல்-திருச்சி சாலையில் உள்ள இந்திரா நகா் பகுதியைச் சோ்ந்தவா் பொற்கோ (45). புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த இவா், நாமக்கல்லில் வாகனங்களுக்கான டயா் கடை நடத்தி வருகிறாா். மேலும் இங்கேயே சொந்தமாக வீடுகட்டி வசிக்கிறாா்.
இறந்துபோன தனது தந்தைக்கு தா்ப்பணம் கொடுப்பதற்காக மனைவி, இரு மகள்களுடன் ஞாயிற்றுக்கிழமை காலை இவா் சொந்த ஊருக்குச் சென்றாா். திங்கள்கிழமை அதிகாலை வீடு திரும்பியபோது, வீட்டின் பின்பக்கக் கதவு உடைந்திருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். பின்னா் வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது பீரோவில் வைத்திருந்த ரூ. 12 லட்சம் ரொக்கப் பணம் திருடு போயிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, நாமக்கல் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தாா். நிகழ்விடத்துக்கு வந்த போலீஸாா், விசாரணை செய்து திருடா்களின் கைரேகை மற்றும் முக்கிய தடயங்களைக் கைப்பற்றினா். பணத்தைத் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இஷான் கிஷன் அதிரடி: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 217 ரன்கள் இலக்கு!

ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்!

அரசு மரியாதையுடன் ஆஷா போஸ்லே உடல் தகனம்!

நிம்பஸ் ப்ராஜெக்ட் 4வது காலாண்டு விற்பனை 77% உயர்வு!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

