சாக்கடை நதியாக மாறிய சுவேத நதி

தம்மம்பட்டியில் ஓடும் சுவேத நதி தற்போது சாக்கடை நதியாகி அதன் சிறப்பை  இழந்து வருகிறது.சேலம் மாவட்டத்தின் எல்லையில் உள்ளது தம்மம்பட்டி. இதையொட்டியுள்ளது நாமக்கல் மாவட்டத்

தம்மம்பட்டியில் ஓடும் சுவேத நதி தற்போது சாக்கடை நதியாகி அதன் சிறப்பை  இழந்து வருகிறது.

சேலம் மாவட்டத்தின் எல்லையில் உள்ளது தம்மம்பட்டி. இதையொட்டியுள்ளது நாமக்கல் மாவட்டத்தின் கொல்லிமலை. சேலம் மாவட்ட எல்லையிலும், கொல்லிமலை அடிவாரத்திலும் உள்ளது ஜங்கமசமுத்திரம் ஊராட்சிக்குள்பட்ட பிள்ளையார்மதி கிராமம்.

இங்குள்ள எழுத்துக்கல் என்னுமிடத்தில் உற்பத்தியாகிறது சுவேத நதி. அங்கிருந்து தம்மம்பட்டி-கெங்கவல்லி-வீரகனூர்-வழியாகச் சென்று, இறுதியில் வங்கக் கடலில் கலக்கிறது. கொல்லிமலைப் பகுதியில் ஏராளமான மூலிகைச் செடிகள், மரங்கள் உள்ளன. அங்கு மழை பெய்யும் போது, அந்த நீர் எழுத்துக்கல்லிலிருந்து ஆறாகத் துவங்குகிறது. 45 ஆண்டுகளுக்கு முன்னர், சுவேத நதியில் குளித்தால், நோய்கள் நீங்கும் என்ற நிலை காணப்பட்டது.

பருவ மழை பெய்தால் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு நதியில் நீரோடி வரும். வீடுகளில் பயன்படுத்துவதற்கு ஆற்று நீரை எடுத்துச் செல்வது கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்தது. ஆனால், சுவேத நதியின் நிலைமையோ தற்போது தலைகீழாக உள்ளது.

தம்மம்பட்டியில் மக்கள் பயன்படுத்தி வீசும் தேவையற்ற பொருள்கள், கழிவுகள், பிளாஸ்டிக் பைகள் என அனைத்தும் சுவேத நதியில் தினந்தோறும் கொட்டப்படுகின்றன. மேலும், பேரூராட்சியின் குறிப்பிட்ட சில வார்டுகளின் சாக்கடை கால்வாய்கள் சுவேத நதியில் கலக்குமாறு திருப்பி விடப்பட்டுள்ளன. இதனால், தற்போது சுவேத நதியில் பெரும்பாலும் சாக்கடை நீர்தான் ஓடுகிறது. ஒருகாலத்தில் மூலிகை நதியாக  புகழப்பட்ட சுவேத நதி, இப்போது சாக்கடை நதியாக மாறிப்போனது வேதனை தருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

எனவே, தனியார் பங்களிப்புடன் இந்த நதியை சீர்படுத்திட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com