பள்ளி மாணவர்களுக்கான தனித்திறன் போட்டி

சேலம் கல்வி மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான தனித்திறன் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சேலம் கல்வி மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான தனித்திறன் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாணவர்களிடம் இருக்கும் தனித்திறனை கண்டறிந்து வளர்ப்பதற்கான தனித்திறன் போட்டிகள் கல்வி மாவட்டம் மற்றும் வருவாய் மாவட்ட அளவில் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுகிறது.
 சேலம் மற்றும் சங்ககிரி கல்வி மாவட்ட அளவிலான போட்டிகள் கடந்த அக்டோபர் 18 ஆம் தேதி நடைபெற்றன.
 இதில் பேச்சு, கட்டுரை, குரலிசை, கருவியிசை, விநாடி வினா, கிராமிய நடனம், பரதம், ஓவியப் போட்டி என 9 வகைப் போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களில் ஒவ்வொரு போட்டிகளிலும் முதல் மூன்று இடங்களை பெற்றவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
 இதில் கல்வி மாவட்ட அளவில் 260 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களில் முதல் இரண்டு இடங்களை பெற்ற 179 மாணவர்கள் கலந்து கொண்ட வருவாய் மாவட்ட அளவிலான போட்டி மரவனேரி பாரதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இப்போட்டியில் முதல் மூன்று இடங்களை பெற்ற 145 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. இதில் மாவட்ட அளவில் முதல் இடம் பெறும் மாணவர்கள் நவம்பர் 17 ஆம் தேதி கோவையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர். இதில் முதன்மைக் கல்வி அலுவலர் அ.ஞானகௌரி, மாவட்டக் கல்வி அலுவலர் (பொறுப்பு) என்.சிவசண்முகம், பாரதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் ஆர்.வரதராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com