மேச்சேரியில் கலை நிகழ்ச்சிகள் மூலம் வேளாண் தொழில்நுட்பத் தகவல்

மேச்சேரி வட்டாரத்தில் கலை நிகழ்ச்சிகள் மூலம் விவசாயிகளுக்கு வேளாண் தொழில்நுட்பத் தகவல்கள் விளக்கப்பட்டன.

மேச்சேரி வட்டாரத்தில் கலை நிகழ்ச்சிகள் மூலம் விவசாயிகளுக்கு வேளாண் தொழில்நுட்பத் தகவல்கள் விளக்கப்பட்டன.
மேச்சேரி வட்டாரம், அமரம் கிராமத்தில் காலஜாதா என்ற கலை நிகழ்ச்சியின் மூலம் வேளாண் சார்ந்த தொழில்நுட்பத்தை விவசாயிகள் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கப்பட்டது.
இந்த கலை நிகழ்ச்சிக்கு வேளாண் உதவி இயக்குநர் ரா.சுஜாதா தலைமை வகித்து தொடக்கி வைத்தார். பாரதி கிராமிய கலை வளர்ச்சி மையத்தினர் கலை நிகழ்ச்சிகளில் நடித்துக் காட்டினர்.
இதில், வேளாண் தொழில்நுட்பங்கள், மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்படும் பயிர்க் காப்பீடு, நுண்ணீர்ப் பாசனம், நீடித்த நிலையான மானாவரி, வேளாண் இயக்கும் பண்ணை கூட்டுத்திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் குறித்து கூறப்பட்டன. நிகழ்ச்சிக்கு வேளாண் அலுவலர் கி.கவிதா, துணை வேளாண் அலுவலர்கள் பாஸ்கர், ரவிகுமார், வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர் செல்வகுமார், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் பத்மாவதி , சக்திவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com