ஏத்தாப்பூரில் அலோபதி முறையில் சிகிச்சை: சித்த மருத்துவர் பிடிபட்டார்

ஏத்தாப்பூரில் அலோபதி முறையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த சித்த மருத்துவரை ஏத்தாப்பூர் போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏத்தாப்பூரில் அலோபதி முறையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த சித்த மருத்துவரை ஏத்தாப்பூர் போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தை அடுத்த ஏத்தாப்பூரில் வசிப்பவர் பெருமாள் மகன் சங்கர் கணேஷ் (35). சித்த மருத்துவர். இவர், ஆங்கில மருத்துவ முறையில் சிகிச்சை அளிப்பதாக வந்த புகாரின்பேரில் ஆத்தூர் தலைமை மருத்துவர் எஸ்.கே. அசோக்குமார், பெத்தநாயக்கன்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஜெயச்செல்வி ஆகியோர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சங்கர் கணேஷ் ஆங்கில மருத்துவ முறையில் சிகிச்சை அளிப்பதும், அவரிடம் ஆங்கில மருந்துகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, சங்கர் கணேஷ் மீது ஏத்தாப்பூர்
காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததோடு, அவரையும் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் ஆங்கில மருந்துகளையும் பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com