மனநலம் பாதித்த சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: 4 பேர் கைது

சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே மனநலம் பாதித்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக நான்கு பேரை போலீசார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே மனநலம் பாதித்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக நான்கு பேரை போலீசார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
தாரமங்கலம் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி மனநலம் பாதிக்கப்பட்டவர். புதன்கிழமை சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்டனர். அப்போது அவரது வீட்டுக்கு வந்த நான்கு பேர்அந்த சிறுமியிடம் தகாத முறையில் நடந்துள்ளனர். ஆனால், அந்த சிறுமி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சிறுமிக்கு பரோட்டா வாங்கிக் கொடுப்பதாக அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. மேலும், அங்கேயுள்ள மயானத்துக்கு சிறுமியை அழைத்துச் சென்ற பள்ளி மாணவர் உள்ளிட்ட நால்வரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அந்த சிறுமியிடம் மிகவும் கொடூரமான முறையில் நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, அந்த வழியாக வந்த ஒருவர், சிறுமியை இளைஞர்கள் கொடுமை செய்வதைப் பார்த்து சத்தமிட்டுள்ளார். இதையடுத்து, சிறுமியை அப்படியே விட்டுவிட்டு அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பின்னர் அந்த சிறுமியை மீட்ட அவர், வீட்டுக்கு அழைத்து வந்து விட்டுள்ளார். மேலும், நடந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகார் குறித்து ஓமலூர் டி.எஸ்.பி பாஸ்கரன், தாரமங்கலம் காவல் ஆய்வாளர் குமரன், ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ரேவதி ஆகியோர் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், மனநலம் பாதித்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரிய வந்தது. இதையடுத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குருக்குபட்டி கிராமம் கோனேரிவளவு பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் குமார் (20), தாமரைச்செல்வன் (20), வேடிச்சி (22) மற்றும் 18 வயது பள்ளி மாணவர் உள்பட நான்கு பேரையும் தாரமங்கலம் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com