ஆட்டையாம்பட்டி பெரியமாரியம்மன் கோயில் திருவிழா

ஆட்டையாம்பட்டியில் உள்ள எட்டுப்பட்டி ஸ்ரீ பெரியமாரியம்மன் கோயில் பொங்கல் பண்டிகையையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

ஆட்டையாம்பட்டியில் உள்ள எட்டுப்பட்டி ஸ்ரீ பெரியமாரியம்மன் கோயில் பொங்கல் பண்டிகையையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
 ஆட்டையாம்பட்டியில் உள்ள எட்டுப்பட்டி ஸ்ரீ பெரியமாரியம்மன் கோயில் பொங்கல் பண்டிகை ஆகஸ்ட் 3-ஆம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதனையடுத்து தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்று வருகின்றன. ஆடி மாதம் 3-ஆவது வெள்ளிக்கிழமையையொட்டி, கேரட், முட்டைக்கோஸ், தக்காளி உள்ளிட்ட 42 வகையான காய்கறிகளால் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டுச் சென்றனர். கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆகஸ்ட் 15-ஆம் தேதி புதன்கிழமை பொங்கல் பண்டிகையையொட்டி தேர்த்திருவிழா நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாட்டினை விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com