சேலம் புத்தகத் திருவிழா: மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டுக் கல்வி உபகரணங்கள்!

சேலம் முதலாவது புத்தகத் திருவிழாவில், மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டுக் கல்வி உபகரணங்கள் அரங்கு பள்ளி சிறார் முதல் பெரியவர் வரை வெகுவாகக் கவர்ந்துள்ளது.


சேலம் முதலாவது புத்தகத் திருவிழாவில், மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டுக் கல்வி உபகரணங்கள் அரங்கு பள்ளி சிறார் முதல் பெரியவர் வரை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
சேலம் போஸ் மைதானத்தில், சேலம் முதலாவது புத்தகத் திருவிழா நவ. 9-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் புத்தகக் கண்காட்சி வரும் நவ. 21-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
சுமார் 110 அரங்குகள் இடம்பெற்றுள்ள இக் கண்காட்சியில், புதுச்சேரியைச் சேர்ந்த சூரியா எஜுகேஷனிஸ்ட் என்ற அரங்கு சிறுவர் முதல் பெரியவர்கள் வரை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. புதுச்சேரியைச் சேர்ந்த குணசேகரன் (48) என்பவர் அமைத்துள்ள இந்த அரங்கில், விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள மரத்திலான விளையாட்டுக் கல்வி உபகரணங்கள் அனைவரையும் ஈர்ப்பதாக உள்ளது.
இது தொடர்பாக குணசேகரன் கூறியது: கற்றலை விட கேட்டலும், கேட்டலை விட பார்த்தலும், பார்த்தலை விட அனுபவித்தலும்தான் அடிப்படைக் கல்விக்கு முக்கியம். முன்பெல்லாம் ஏராளமான தொலைபேசி எண்களையும், கணக்குகளையும் மனதிலே போடும் பழக்கம் இருந்தது. இப்போது செல்லிடப்பேசி நம்மை ஆக்கிரமித்துவிட்ட நிலையில் எல்லாமே மாறி விட்டது. சாதாரண தொலைபேசி எண்களைக் கூட நினைவில் வைத்திருக்க முடியவில்லை. சாப்பிடாத குழந்தை கூட உண்டு. ஆனால், விளையாடாமல் குழந்தைகள் இருக்காது.
எனவே, அவர்களுக்கு விளையாட்டுடன் தொடர்புடைய மழலை புதிர்தட்டு, மணிச் சட்டம் உள்ளிட்ட மூளைக்கு வேலை தரும் கல்வி உபகரணங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறேன். மரத்தில் தயாரிக்கப்படும் விளையாட்டு உபகரணங்கள் மூலம் குழந்தைகள் தொடு உணர்வுடன், மூளைக்கு வேலை கொடுக்கும் செயல் முறை கல்வி மூலம் அவர்களின் கற்றல் திறன் மேம்படும்.
மாற்றுத் திறன் குழந்தைகளும் பயன்படுத்துகிற விளையாட்டுக் கல்வி உபகரணங்களைத் தயாரித்து வருகிறேன். கடந்த 35 ஆண்டுகளாக இதுபோன்று சிறுவர் முதல் பெரியவர்களுக்கான விளையாட்டுக் கல்வி உபகரணங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளேன். வடிவங்கள், வண்ணங்கள், அளவுகள் என்ற பல்வேறு வகையிலான கல்வி உபகரணங்களைத் தயாரித்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் விற்பனை செய்து வருகிறோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com