ஓமலூர், தம்மம்பட்டியில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கஜா புயல் காரணமாக ஓமலூர்,  காடையாம்பட்டி,  தாரமங்கலம் மற்றும் கருப்பூர் வட்டாரத்தில் வெள்ளிக்கிழமை காற்றுடன்

கஜா புயல் காரணமாக ஓமலூர்,  காடையாம்பட்டி,  தாரமங்கலம் மற்றும் கருப்பூர் வட்டாரத்தில் வெள்ளிக்கிழமை காற்றுடன் மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டது.
சேலம் மாவட்டம் முழுவதும் கஜா புயல் காரணமாக பரவலாக மழை பெய்தது. ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் மற்றும் கருப்பூர் வட்டார கிராமங்களில் காற்றுடன் மழை பெய்தது. வெள்ளிக்கிழமை அதிகாலையில் இருந்து லேசான மழை பெய்ய தொடங்கியது. பின்னர் காற்றுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இதனால், பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வராமல் வீட்டிலேயே முடங்கினர். தொடர்ந்து லேசான மழை பெய்துகொண்டு இருந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 
ஓமலூர் உட்கோட்டத்தில் வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்பு நிலைய வீரர்கள் என அனைத்துத் துறை அதிகாரிகளும் மழை பாதிப்பு மீட்புப் பணிகளுக்கு  தயார் நிலையில் உள்ளனர். வருவாய்த்துறை அதிகாரிகள் ரோந்து பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். கிராம நிர்வாக அதிகாரிகள் கிராமங்களில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 
தம்மம்பட்டியில்
 தம்மம்பட்டி, கெங்கவல்லி, வீரகனூர் வட்டாரப் பகுதிகளில்  வெள்ளிக்கிழமை பெய்த தொடர்மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தம்மம்பட்டியைச் சுற்றியுள்ள பகுதிகளில்  வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணி முதல்  பிற்பகல் 3 மணி வரை தொடர்ந்து மழை பெய்தது.அதற்குபிறகு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. 
நாள்முழுவதும் பெய்த மழையால்  பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. வங்கிகள், அரசு அலுவலகங்களில் வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் இன்றி  வெறிச்சோடிக் காணப்பட்டது. பேருந்துகளிலும் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது. 
பொதுமக்கள் பலரும் நாள்முழுவதும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அரவை ஆலைகள் மூடப்பட்டிருந்தன. செங்கல் சூளைகளில் மழைநீர் தேங்கி இருந்தது. பள்ளி, கல்லூரிகளுக்கு பொதுவிடுமுறை விடப்பட்டதால், மாணவ, மாணவியர் மழையால் பாதிக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com