வாழப்பாடியில்  ராமசாமி படையாச்சிநூற்றாண்டு விழா

சேலம் மாவட்டம், வாழப்பாடியில் மறைந்த முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியாரின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்டம், வாழப்பாடியில் மறைந்த முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியாரின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சி. தமிழகத்தில் பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்துவதற்கு கருவியாக இருந்தவர்.
வாழப்பாடியில் அவரது நூற்றாண்டு பிறந்த நாள் விழா, வன்னியர் குல சத்திரியர் நல அறக்கட்டளை சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு அறக்கட்டளை தலைவர் எம்.சின்னதுரை வரவேற்றார். பா.ம.க. மாநில துணை பொதுச் செயலர் பி.என்.குணசேகரன், கிழக்கு மாவட்டச் செயலர் எம்.பி.நடராஜ், தி.மு.க. ஒன்றிய செயலர் சக்கரவர்த்தி, நகரச் செயலர் பி.சி.செல்வம், சமத்துவ மக்கள் கட்சி தெற்கு மாவட்டச் செயலர் ஜவாஹர், காய்கறி விவசாயிகள் சங்கத் தலைவர் இரா.முருகன், பா.ஜ.க. பிரசார அணி செயலர் ஆடிட்டர் குப்பமுத்து, காங்கிரஸ் தொழிற்சங்க மாவட்டத் தலைவர் செந்நிலவன், சத்திரிய சாம்ராஜியம் நிர்வாகி சிங்கிபுரம் ரஞ்சித்குமார் ஆகியோர் ராமசாமி படையாச்சி உருவப் படத்துக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.
இந்த விழாவில், ஊர் கவுண்டர் மூர்த்தி, கரக்காரர் ஞானசூரியன், பன்னீர்செல்வம், கமலாலயம் ஆதிராஜன், குட்டக்கரை சரவணன், செந்நிலவன், புதுப்பாளையம் ராமச்சந்திரன், சகாதேவன், ஆட்டோ சங்க தொழிலாளர் சங்க செயலர் சுரேஷ், சுரேந்திரன், பச்சமுத்து உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதில், இடஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கும், மறைந்த முன்னாள் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும் வன்னியர் சங்க முன்னாள் தலைவருமான குருவுக்கும் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com