அமுத்சுரபி சிக்கனம் மற்றும் கடன் கூட்டுறவுச் சங்கக் கிளை திறப்பு

வாழப்பாடியில் அமுத்சுரபி சிக்கனம் மற்றும் கடன் கூட்டுறவுச் சங்கத்தின் கிளை திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

வாழப்பாடியில் அமுத்சுரபி சிக்கனம் மற்றும் கடன் கூட்டுறவுச் சங்கத்தின் கிளை திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
சேலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் அமுத்சுரபி சிக்கனம் மற்றும் கடன் கூட்டுறவு சங்கத்தின் 54-ஆவது கிளை வாழப்பாடியில் திறக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவுக்கு வாழப்பாடி காவல் ஆய்வாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். கிளைப் பொறுப்பாளர் பன்னீர்செல்வம் வரவேற்றார்.
வாழப்பாடி வணிகர்கள் சங்கத் தலைவர் சத்தியநாராயணன் கிளை அலுவலகத்தையும், வாழப்பாடி அரிமா சங்க பட்டயத் தலைவர் சந்திரசேகரன் பணம் செலுத்தும் இயந்திரத்தையும் திறந்து வைத்தனர். அமுத்சுரபி துணை பொது மேலாளர் மணிகண்டன், ஸ்டார் பவுண்டேஷன் தலைவர் ஜவஹர், முன்னாள் கவுன்சிலர் கமல்ராஜா ஆகியோர் குத்துவிளக்கேற்றி வங்கி கணக்குகளைத் துவக்கி வைத்தனர்.
விழாவில், ஆசிரியர்கள் ராஜேந்திரன், கலையரசி, ராஜேஸ்வரி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மத்திய அரசின் விவசாயம் மற்றும் கூட்டுறவுத் துறையின் அனுமதி பெற்று இயங்கும் இந் நிறுவனம், சிறு,குறு விவசாயிகளுக்குக் குறைந்த வட்டியில் கடனுதவி வழங்கத் திட்டமிட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com