எட்டுப்பட்டி பெரியமாரியம்மன் கோயில் தேர்த் திருவிழா

ஆட்டையாம்பட்டி எட்டுப்பட்டி பெரியமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி புதன்கிழமை தேர்த் திருவிழா நடைபெற்றது.

ஆட்டையாம்பட்டி எட்டுப்பட்டி பெரியமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி புதன்கிழமை தேர்த் திருவிழா நடைபெற்றது.
 ஆட்டையாம்பட்டி எட்டுப்பட்டி பெரியமாரியம்மன் கோயில் தேர்த் திருவிழாவை முன்னிட்டு கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி கம்பம் நடும் விழா நடைபெற்றது.
 இதனைத் தொடர்ந்து 13 -ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு சத்தா பரணம் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. புதன்கிழமை காலை திருமணிமுத்தாற்றில் இருந்து சக்தி கரகத்துடன் பக்தர்கள் ஊர்வலமாக வந்து குண்டம் இறங்கினர். மாலையில் கோயில் தர்மகர்த்தா ரகுராஜ் தலைமையில் பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். ராசிபுரம் பிரதான சாலை, கடைவீதி, வேலநத்தம் பாவடி தெரு வழியாக திருத்தேர் வீதியுலா நடைபெற்றது. தேர்நிலை சேர்ந்தவுடன் கோயில் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது . இதனையடுத்து வியாழக்கிழமை (ஆக.15) காலை பொங்கல் வைத்து, ஆடு, கோழி பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலையில் கம்பம் பிடிங்கி ஊர் கிணற்றில் வைத்து பூஜை நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை வண்டி வேடிக்கை நிகழ்ச்சியும், சனிக்கிழமை ஊஞ்சல் உற்சவம், அம்மன் திருவீதியுலா மற்றும் மஞ்சள் உற்சவ விழாவும் நடைபெறுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com