தேசிய சாப்ட் டென்னிஸ் போட்டியில் சேஷாஸ் பள்ளி மாணவருக்கு வெள்ளிப் பதக்கம்

தேசிய அளவிலான சாப்ட் டென்னிஸ் போட்டியில் ஸ்ரீ சேஷாஸ் சர்வதேச பள்ளி மாணவர் சர்வேஷ் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

தேசிய அளவிலான சாப்ட் டென்னிஸ் போட்டியில் ஸ்ரீ சேஷாஸ் சர்வதேச பள்ளி மாணவர் சர்வேஷ் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
மத்தியபிரதேச மாநிலம், தேவாஸ் மாவட்டத்தில் 64-ஆவது இந்திய பள்ளிகளுக்கான சாப்ட் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. நாடு முழுவதும் இருந்து சுமார் 800 மாணவர்கள் பங்கேற்றனர். இதில், சேலத்திலிருந்து ஏற்காடு அடிவாரம் ஸ்ரீ சேஷாஸ் சர்வதேச பப்ளிக் பள்ளி 6-ஆம் வகுப்பு மாணவர் சர்வேஷ் கலந்து கொண்டார். இவர், 14 வயதுக்குள்பட்ட பிரிவில் தேசிய அளவில் வெள்ளிப் பதக்கம் வென்று தமிழகத்திற்கு சிறப்புச் சேர்த்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com