100 நாள் வேலை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

ஓமலூர் ஒன்றியத்தில் நூறு நாள் வேலை திட்டப் பணிகளை தொடர்ந்து வழங்கக் கோரி, நூற்றுக்கும் மேற்பட்ட

ஓமலூர் ஒன்றியத்தில் நூறு நாள் வேலை திட்டப் பணிகளை தொடர்ந்து வழங்கக் கோரி, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் தொழிலாளர்கள் ஓமலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசுகள் விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலை வழங்க வேண்டும். ஒரு நாள் கூலியாக ரூ.400 வழங்க வேண்டும். கூலித் தொழிலாளர்கள் வாழ்வாதாரமாக உள்ள நூறு நாள் வேலை திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். ஓமலூர் ஒன்றியத்தில் உள்ள 33 ஊராட்சிகளிலும் உள்ள ஏரி, குளங்கள் மட்டுமல்லாது கிராம சாலைகள் சீரமைப்பு, கிராம சுகாதாரப் பணிகள் போன்றவற்றிலும் நூறு நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். தொடர்ந்து, இதில் கலந்துகொண்ட 300-க்கும் மேற்பட்டோர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com